< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்" - தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
|8 Aug 2024 8:30 AM IST
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
நாகப்பட்டினம்,
வேதாரண்யம் அருகே கோடியக்கரை தென்கிழக்கு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களை தாக்கி இலங்கை கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி பொருட்களை பறித்துள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள், இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் தற்போது கோடியக்கரை அருகே மீன்பிடித்த மீனவர்களை தாக்கி இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.