< Back
மாநில செய்திகள்
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
மாநில செய்திகள்

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

தினத்தந்தி
|
21 Feb 2023 2:51 PM IST

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கட்ற்படையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை,

இந்தியாவின் ராமேஸ்வர கடற்கரை பகுதியில் இருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நெடுந்தீவு. நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கட்ற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 7 மீனவர்களையும் இலங்கை துறைமுகத்தில் வைத்து தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் விசைப்படகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் முதற்கட்ட விசாரணையில் கைதான மீனவர்கள் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்