< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
|27 Aug 2024 6:44 AM IST
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம்,
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்று இருக்கிறது.
கைதான மீனவர்களை அவர்களுடைய விசைப்படகுடன் மன்னார் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.