< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்த இலங்கை கடற்படை..!
|10 Dec 2023 6:56 AM IST
பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாகப்பட்டினம்,
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 படகுகளில் மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மீனவர்களை கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.