< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தினத்தந்தி
|
15 March 2024 8:40 AM IST

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நாகை,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைநகர் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் 15 பேரையும் படகுகளுடன் கைது செய்துள்ளது. காங்கேசன் நகர் துறைமுகத்தில் வைத்து தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்