< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
சாலையோரம் மர்மமான முறையில் செத்து கிடந்த புள்ளிமான்
|11 Feb 2023 12:15 AM IST
செஞ்சி அருகே சாலையோரம் மர்மமான முறையில் செத்து கிடந்த புள்ளிமான் வனத்துறையினர் தீவிர விசாரணை
செஞ்சி
செஞ்சி-விழுப்புரம் சாலையில் ஒட்டம்பட்டு அருகே உள்ள காரை காப்பு காட்டில் ஏராளமான மான்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு செஞ்சி-விழுப்புரம் சாலையில் ஒட்டம்பட்டு சாலை ஓரம் வனதுர்க்கை அம்மன் கோவில் அருகே புள்ளிமான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அதன் உடலில் காயங்கள் இருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி வனத்துறையினர் இறந்து கிடந்த மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அந்த புள்ளிமான் சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த வாகனத்தில் அடிபட்டு இறந்ததா? அல்லது யாராவது அதை அடித்து துன்புறுத்தி கொன்றார்களா? அல்லது மர்ம நபர்கள் யரேனும் வேட்டையாடி கொன்றனரா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.