< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
ஸ்ரீரமணா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
|13 Oct 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகே ஸ்ரீரமணா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள காட்டுச்செல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீரமணா பப்ளிக் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் கவிதாபாஸ்கரன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தாளாளர் ஆர்.பாஸ்கரன் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். விழாவில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக முதல்வர் வைரம் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் கே.கார்த்தி நன்றி கூறினார்.
விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் கே.ஜெசிந்தா மேரி தலைமையிலானகுழுவினர் செய்திருந்தனர்.