< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
விளையாட்டு விழா
|13 Sept 2023 12:15 AM IST
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் நேசனல் அகாடமி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் நேசனல் அகாடமி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் முகமது சதக் கல்வியியல் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் பங்கேற்றார். பள்ளி தாளாளர் டாக்டர் செய்யது அப்துல்லா தலைமை தாங்கினார். பள்ளி ஆலோசகர் டாக்டர் சங்கரலிங்கம், பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி, மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜமுத்து, ஐ.சி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி, பி.ஒய்.பி. தலைமை ஆசிரியர் வித்யாஹரிணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் சோமசுந்தரம் பரிசு வழங்கினார். விழாவில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.