< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
வீராங்கனைகளுக்கு விளையாட்டு போட்டிகள்
|30 Aug 2023 12:23 AM IST
வீராங்கனைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறும் வீராங்கனைகளுக்கான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் வீராங்கனைகளுக்கு 100 மீட்டர் ஓட்டமும், வாலிபால் போட்டியும் நடைபெற்றன.