கரூர்
பொது சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
|பொது சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று பொது சுகாதாரத்துறை சார்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பொது சுகாதாரத்துறை அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்ட பந்தயம், குண்டு எறிதல், கயிறு இழுக்கும் போட்டி, புதையல் எடுக்கும் போட்டி, கூடைப்பந்து மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட குழு மற்றும் தனிநபர் விளையாட்டு போட்டி விழாவினை கிரிக்கெட் விளையாடி கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், வருகிற 10-ந்தேதி சென்னையில் தொடங்க உள்ள நூற்றாண்டு ஜோதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு ஜோதி கரூர் மாவட்டத்திற்கு வருகிற 1-ந் தேதி வந்தடையும் என்றார். பின்னர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் 100 என்ற எண் வடிவத்தில் நின்று குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சந்தோஷ்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா மற்றும் அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.