< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
|23 Aug 2022 11:49 PM IST
மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில், குன்னம் குறுவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, மேஜைப்பந்து, இறகுப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டு தங்களது விளையாட்டுத் திறமை மற்றும் உடல் திறனை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் முதலிடம் பெறும் அணி மற்றும் மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.