அரியலூர்
பாத்திமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் விளையாட்டு போட்டிகள்
|வெள்ளி விழாவையொட்டி பாத்திமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி முதல்வர் உர்சலா சமந்தா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ரோச் அலெக்சாண்டர் கொடியை அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில் ஓட்டப்பந்தயம், வாலிபால், கோ-கோ, எறிபந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் மழலையர் முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் வகையில் ஒரு மாதம் விளையாட்டு போட்டிகளை நடத்த பள்ளி நிர்வாகம் முடிவு ெசய்து உள்ளது. பிப்ரவரி மாதம் 3-ந் தேதி இறுதி போட்டி நடத்தி வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. முன்னதாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த விழாவில் துணை பங்கு தந்தை குமார், உடற்கல்வி ஆசிரியர் செல்வமணி மற்றும் ஆசிரியைகள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.