< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
சுகாதார பணியாளர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள்
|30 Oct 2022 12:17 AM IST
தோகைமலையில் சுகாதார பணியாளர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவையொட்டி சுகாதார பணியாளர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் தோகைமலையில் நடந்தது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் தியாகராஜன் தலைமை தாங்கினார். இதில் பாட்டுப்போட்டி, கயிறு இழுத்தல், எலுமிச்சை பழங்களை ஸ்பூனில் எடுத்து செல்லுதல், இசை நாற்காலி, சோடா பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், பொது சுகாதாரத்துறைகள் பற்றிய வினா விடைகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. தொடர்ந்து பொது சுகாதாரம் குறித்து நடனம், நாடகம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற சுகாதார பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன.