< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
விளையாட்டு போட்டிகள்
|26 Dec 2022 2:13 AM IST
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற ஜனவரி 2023-ஆண்டு நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான போட்டியில் குழு மற்றும் தனி நபர்களின் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in-ல் பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுப்பிரிவில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்து பந்து போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் 7401703506 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.