< Back
மாநில செய்திகள்
விளையாட்டு போட்டிகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்

விளையாட்டு போட்டிகள்

தினத்தந்தி
|
22 Nov 2022 12:15 AM IST

விக்கிரவாண்டி அரசு ஆஸ்பத்திரியில் விளையாட்டு போட்டிகள்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி ஒன்றியம் ராதாபுரத்தில் உள்ள வட்டார அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமை தாங்கி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் நடனம், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, உறியடித்தல் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு டாக்டர்கள் ஆறுமுகம், ராமகிருஷ்ணன், பிரேமா, பாலாஜி அய்யனார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் ரமணி, பாபு, பிருத்திவிராஜ், மருந்தாளுனர்கள் நந்தகுமார், ஆனந்த், செவிலியர்கள் சரோஜா, லட்சுமி, சரஸ்வதி, முத்துராமலிங்கம் மற்றும் வட்டார சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்