கிருஷ்ணகிரி
பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள்
|கிருஷ்ணகிரியில் பள்ளிக்கூட மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் பள்ளிக்கூட மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
விளையாட்டு போட்டிகள்
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வருவாய் மாவட்ட அளவில் மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் துரை தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் வரவேற்றார். போட்டியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் என 10 சரகங்களை சேர்ந்த, 1,800 மாணவர்கள் 120 அணிகளாக கலந்து கொண்டனர்.
கைப்பந்து
இவர்களுக்கு 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் கோ-கோ, கால்பந்து, கைப்பந்து, வளைகோல் பந்து ஆகிய குழு போட்டிகள் நடத்தப்பட்டன. உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். இதில் முதலிடம் பெறும் அணிகள் புதுக்கோட்டையில் ஜூனியர் அணியும், தேனியில் சீனியர் அணியும், கோவையில் சூப்பர் சீனியர் அணியும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.