< Back
மாநில செய்திகள்
தனியார் ஐ.டி.ஐ.களுக்கிடையேயான விளையாட்டு போட்டி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தனியார் ஐ.டி.ஐ.களுக்கிடையேயான விளையாட்டு போட்டி

தினத்தந்தி
|
23 Feb 2023 12:15 AM IST

விழுப்புரம் மாவட்ட தனியார் ஐ.டி.ஐ.களுக்கிடையேயான விளையாட்டு போட்டி

திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையே(ஐ.டி.ஐ.) மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் ஸ்ரீ லட்சுமி தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்ட மண்டல பயிற்சி இணை இயக்குனர் டி.ஜான்போஸ்கோ வழிகாட்டுதலில் 15-க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு விளையாடினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மண்டல அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. விளையாட்டு விழா பொறுப்பாளர்கள் நியூட்டன் ஐ.டி.ஐ. நிர்வாகி ஜெயச்சந்திரன் மற்றும் அரகண்டநல்லூர் ஸ்ரீ லட்சுமி ஐ.டி.ஐ. நிர்வாகி கே.ராஜா சுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து போட்டியை நடத்தினர். முடிவில் ஸ்ரீ லக்ஷ்மி ஐ.டி.ஐ. துணை முதல்வர் பாலாஜி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்