< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
கூட்டுறவு பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி
|13 Nov 2022 12:15 AM IST
கூட்டுறவு பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு துறை மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் மனோகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சரக துணை பதிவாளர், ராம்கோ பண்டகசாலை மேலாண்மை இயக்குனர், பொது வினியோக திட்ட துணை பதிவாளர், கூட்டுறவு துறை பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.