< Back
மாநில செய்திகள்
மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள்

தினத்தந்தி
|
29 Oct 2022 12:15 AM IST

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது.

கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில், மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகள் நவம்பர் 14-ந் தேதி சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5,000, 2-ம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ்ர்களுள் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள் இருவரை தேர்வு செய்து சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2,000 வழங்கப்படும்.பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் 14-ந் தேதி காலை 8.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கும் தொடங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் படிவத்தை பூர்த்தி செய்து தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பம் பெற்று மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்