< Back
மாநில செய்திகள்
மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள்

தினத்தந்தி
|
1 Sept 2022 10:41 PM IST

அண்ணா, பெரியார் பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் சிவகங்கையில் நடக்கிறது.

அண்ணா, பெரியார் பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் சிவகங்கையில் நடக்கிறது.

பேச்சுப்போட்டிகள்

அண்ணா, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. அதன்படி அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 15-ந் தேதியும், பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 17-ந் தேதியும் சிவகங்கை மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கும் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) மற்றும் அனைத்து கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கும் தனித்தனியே அரசு விதிமுறைகளின்படியும், சமூக இடைவெளியை பின்பற்றியும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில் நடைபெற உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் முற்பகல் 8.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 1.30 மணிக்கும் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பரிசுத்தொகை

சிறப்பு திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்பு படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்