< Back
மாநில செய்திகள்
திருவாடானையில் ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

திருவாடானையில் ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி

தினத்தந்தி
|
2 March 2023 6:45 PM GMT

திருவாடானையில் ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி நடந்தது.

தொண்டி,

திருவாடானை யூனியனில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் சுமார் 30 எழுத்தறிவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களின் மூலம் பல்வேறு வகையான செயல்பாடுகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாடானை பாரதிநகர் வட்டார வள மையத்தில் சிகரம் தொட சிலேட்டை எடு எனும் தலைப்பில் பள்ளி ஆசிரியர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. போட்டிகளை வட்டார கல்வி அலுவலர் வசந்த பாரதி தொடங்கி வைத்தார். இதில் காரங்காடு ஆர்.சி. தொடக்கப்பள்ளி ஆசிரியர் கருணாநிதி முதல் பரிசையும், காடங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பீட்டர் சகாயராஜ் 2-ம் பரிசையும், கருப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சேதுராமன் 3-ம் பரிசையும் பெற்றனர். போட்டியின் நடுவர்களாக பள்ளி ஆசிரியர்கள் மங்கை, தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் செயல்பட்டனர். இதில் திருவாடானை வட்டாரத்தை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், திருவாடானை ஒன்றிய புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெபாஸ்டின் ஜெயராஜ், ஆசிரியர் பயிற்றுநர்கள் காளமேகலை, தனலெட்சுமி, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்