தென்காசி
மாணவர்களுக்கு பேச்சு போட்டி
|கடையநல்லூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடந்தது
கடையநல்லூர்:
தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அண்ணல் காந்தியடிகள், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த தின விழா பேச்சுப்போட்டி தென்காசி ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெவ்வேறு தினங்களில் நடைபெற்றது.
போட்டிகளில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர். பா.பரதன் தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடத்தையும், அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.
இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் கற்பகமணி, பேரறிஞர் அண்ணா பிறந்த தின பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நெல்லை தமிழ் வளர்ச்சித் துறையின் அதிகாரி ஷீலா ஜெபரூபி முதல் பரிசாக ரூ.5000 மற்றும் சான்றிதழும், இரண்டாம் பரிசாக தலா ரூ.3000-ம், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்.
பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் மங்களத்துரை, உதவி தலைமை ஆசிரியர் ராஜன், முதுகலை தமிழாசிரியர் சண்முகசுந்தரம், தமிழாசிரியர் மாரியப்பன், முதுகலை வரலாற்று ஆசிரியர் பசும்பொன் ராஜா, எட்டாம் வகுப்பு தமிழாசிரியர் பாலச்சந்தர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டினர்.