< Back
தமிழக செய்திகள்
மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
ராமநாதபுரம்
தமிழக செய்திகள்

மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

தினத்தந்தி
|
14 Oct 2023 12:15 AM IST

மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது.

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் காந்தி, நேரு ஆகியோரின் பிறந்த நாளையொட்டி வருகிற 26, 27-ந் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தேர்வு செய்ய உள்ளனர். போட்டிக்கான தலைப்புகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு செய்து சிறப்பு பரிசு ரூ.2000 வழங்கப்படும். இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்