< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
விருதுநகர்
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

தினத்தந்தி
|
5 Sep 2023 8:34 PM GMT

அண்ணா பிறந்தநாைள முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி 12-ந் தேதி நடக்கிறது.


அண்ணா பிறந்தநாைள முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி 12-ந் தேதி நடக்கிறது.

அண்ணா பிறந்தநாள்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணா பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பேச்சுப்போட்டிகள் வருகிற 12-ந் தேதியன்று நடக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகலிலும் விருதுநகர் ஹாஜி.பி. சையது முகமது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு, தனியார் உதவி பெறும் கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் தொழில்நுட்ப கல்லூரிகளின் மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

தலைப்பு விவரம்

போட்டிகள் குறித்த விவரங்கள் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குனர் வாயிலாகவும் அனுப்பி வைக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு காஞ்சி தலைவன், அண்ணாவும் பெரியாரும், தமிழும் அண்ணாவும், எழுத்தாளராக அண்ணா, தென்னாட்டு பெர்னாட்ஷா என்ற தலைப்பு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல கல்லூரி மாணவர்களுக்கு அண்ணாவின் மேடைப்பேச்சு, கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் ஆகிய தலைப்புகளில் அண்ணாவின் பிறந்தநாள் பேச்சு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சிறப்பு பரிசு

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ. 2 ஆயிரம் என்ற வீதத்திலும் வழங்கப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கான நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் மட்டும் தங்கள் பேச்சுத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் தனியாக தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசாக தலா ரூ.2 ஆயிரம் என்ற வீதத்திலும் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்