பெரம்பலூர்
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்று பேச்சுப்போட்டி
|கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி பெரம்பலூரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. போட்டிக்கு தி.மு.க. மாநில பொறியாளர் அணியின் துணை செயலாளர் பரமேஷ்குமார் தலைமை தாங்குகிறார். இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா. எம்.பி., போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். பேச்சு போட்டியில் பெரம்பலூர், குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. போட்டியில் முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான பேச்சு போட்டியில் பங்கேற்கவுள்ளனர். அதில் முதலிடத்தில் பிடிப்பவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படவுள்ளது, என்று மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.