< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி

தினத்தந்தி
|
14 Sep 2023 6:45 PM GMT

பெரியார் பிறந்தநாளையொட்டி வருகிற 19-ந்தேதி நாகை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடக்கிறது.


பெரியார் பிறந்தநாளையொட்டி வருகிற 19-ந்தேதி நாகை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது என்று நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் 2023-ம் நிதி ஆண்டில் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பேச்சுப்போட்டிகளை நடத்த உள்ளது. அப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பெரியாரும் பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மான பேரொளி, தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடக்கிறது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள், அந்தந்த கல்லூரி மாணவர்களிடையே முதற்கட்டமாக பேச்சுப்போட்டிகள் நடத்தி கல்லூரிக்கு 2 பேரை தேர்வு செய்யவேண்டும். இந்த போட்டிகள் 19-ந்தேதி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடக்கிறது. அன்றைய நாள் காலை 10.15 மணிக்கு மாணவர்கள் வந்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்