< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்
தேனி
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்

தினத்தந்தி
|
29 Sep 2023 12:00 AM GMT

சுருளி அருவியில் சாரல் விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில், சிறந்த சுற்றுலா தலமாக சுருளி அருவி திகழ்கிறது. இந்த அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சுருளி அருவியில் நேற்று முன்தினம் சாரல் திருவிழா தொடங்கியது. வருகிற 2-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

2-வது நாளான நேற்று பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் தேவராட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் ஆடி மாணவ-மாணவிகள் அசத்தினர். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பானை உடைக்கும் போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இன்று (வெள்ளிக்கிழமை) மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு கோலப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது.

இதற்கிடையே சுருளி அருவியில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்ததோடு, மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். சாரல் விழா முடியும் வரை அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளிடம் வனத்துறையினர் கட்டணம் வசூலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்