< Back
மாநில செய்திகள்
காலபைரவருக்கு சிறப்பு யாகம்
சேலம்
மாநில செய்திகள்

காலபைரவருக்கு சிறப்பு யாகம்

தினத்தந்தி
|
21 July 2022 12:08 AM IST

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு யாகம் நடந்தது.

கொண்டலாம்பட்டி:-

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவர் சாமிக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித கலசத்தில் புனித தீர்த்தங்கள் நிரப்பப்பட்டு அதற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலபைரவரை வழிபட்டனர். இந்த வழிபாட்டில், உத்தமசோழபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகைளை சேர்ந்த பக்தர்கள் காலபைரவர் சன்னதிக்கு திரளாக வந்து வழிபட்டனர். மேலும் நோய் நொடி, குறையின்றி வாழ புனித கலசத்தில் உள்ள தீர்த்தத்தை பெற்று சென்றனர்.

மேலும் செய்திகள்