< Back
மாநில செய்திகள்
சீதக்கமங்கலம் மூலநாதர் கோவிலில் சிறப்பு யாகம்
திருவாரூர்
மாநில செய்திகள்

சீதக்கமங்கலம் மூலநாதர் கோவிலில் சிறப்பு யாகம்

தினத்தந்தி
|
4 July 2023 12:15 AM IST

ஆனி மாத பவுர்ணமியையொட்டி சீதக்கமங்கலம் மூலநாதர் கோவிலில் சிறப்பு யாகம்

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள சீதக்கமங்கலம் அபயாம்பிகா சமேத மூலநாதர் கோவிலில் உள்ளது. இந்த கோவில் திருமண தடை நீங்கும் தலமாகும். இந்த கோவிலில் ஆனி மாத பவுர்ணமியையொட்டி நடக்கும் யாகத்தில் கலந்து கொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடை நீங்கும் என பக்தர்கள் நம்பிக்கை. நேற்று பவுர்ணமியையொட்டி சிறப்பு யாகம் நடந்தது. இதை முன்னிட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் பால், தேன், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள் ,சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணி முதல் 10 மணி வரை, கோவில் வளாகத்தில் யாகம் நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்