< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
கைலாசநாதர் கோவிலில் சிறப்பு யாகம்
|7 Aug 2022 12:14 AM IST
கைலாசநாதர் கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது.
தாமரைக்குளம்:
அரியலூர் கைலாசநாதர் கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனாருக்கும், நாயனாருக்கும் திருக்கயிலாயத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த ஐதீக நிகழ்ச்சி, குருபூஜை நடந்தது. இதையொட்டி கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. 108 சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீரால் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.