< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
ஜெகந்நாத பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்
|23 Oct 2023 12:15 AM IST
கும்பகோணம் அருகே ஜெகந்நாத பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள நாதன்கோவில் ஜெகந்நாத பெருமாள் கோவிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த சிறப்பு யாகத்தில் 108 வகையான மங்கள பொருட்களால் பூர்ணாகுதியும், சிறப்பு மகா தீபாராதனையும் செய்யப்பட்டு, புனிதநீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு மூலவர், உற்சவர் மற்றும் செண்பகவல்லி தாயாருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.