< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு
|13 Oct 2023 12:15 AM IST
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே ஆக்கூரில் வாள்நெடுங்கண்ணி அம்மன் உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி பகவானுக்கு பால், தேன், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக தான்தோன்றீஸ்வரர், வாள் நெடுங்கண்ணி அம்மன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.