< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
திருநெடுங்களநாதர் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
|13 Jan 2023 1:21 AM IST
திருநெடுங்களநாதர் கோவிலில் வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநெடுங்குளம் ஊராட்சியில் உள்ள காசிக்கு நிகரான தலமான திருநெடுங்களநாதர் கோவிலில் நேற்று பஞ்சமி திதியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால், இளநீர், தேன் உள்பட 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் கலச அபிஷேகமும், மூல கலச அபிஷேகமும் நடைபெற்று, வராகி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சிவனடியார்கள், பக்தர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மேனகா முன்னிலையில் ேகாவில் அர்ச்சகர்கள் சோமசுந்தர சிவாச்சாரியார் மற்றும் ரமேஷ் சிவாச்சாரியார் செய்திருந்தனர்.