< Back
மாநில செய்திகள்
கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு
திருச்சி
மாநில செய்திகள்

கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
14 April 2023 12:52 AM IST

கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உபகோவிலாக விளங்கும் போஜீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி தேய்பிறை அஷ்டமியான நேற்று இக்கோவிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பால், நெய், இளநீர், கரும்பு உள்ளிட்ட 16 பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து வடை மாலை சாத்தப்பட்டு கால பைரவருக்கு தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் போஜீஸ்வரர் மற்றும் ஆனந்தவல்லி தாயாருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை பயபக்தியுடன் வணங்கினர். இதேபோல் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசாமி கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தா.பேட்டையில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி பல்வேறு வகையான பொருட்களை கொண்டு பஞ்சமுக பைரவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்.

மேலும் செய்திகள்