< Back
மாநில செய்திகள்
அமாவாசையையொட்டி  கோவில்களில் சிறப்பு வழிபாடு
கரூர்
மாநில செய்திகள்

அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
30 Jun 2022 12:04 AM IST

அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அரவக்குறிச்சி அருகே நாகம்பள்ளி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அணைக்கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல், மலைக்கோவிலூர் சிவசக்தி மாரியம்மன், அரவக்குறிச்சி கருப்பண்ணசாமி கோவில், மாரியம்மன் கோவில், சின்னமாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்