< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அஷ்டமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
|19 Aug 2022 12:04 AM IST
அஷ்டமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், விபூதி, உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்கள் தங்களது நகைகளை பூஜைக்கு கொடுத்து திரும்ப பெற்று ெகாண்டனர். இதேபோல மண்மங்கலம், காகிதபுரம் பகுதிகளில் கோவில்களிலும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.