< Back
மாநில செய்திகள்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
6 May 2023 12:15 AM IST

சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சீர்காழி:

சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்ரா பவுர்ணமி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் கீழத்தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக கோவிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பால் காவடி, பறவை காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக தேர் தெற்கு வீதி, தேர் மேலவீதி, தேர் வடக்கு வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

முத்துமாரியம்மன் கோவில்

இதே போல் சட்டநாதபுரம் மெயின் ரோட்டில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உப்பனாற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஆதமங்கலம் அய்யனார் கோவில், அரூர் மாரியம்மன் கோவில், தென்பாதி மகா மாரியம்மன் கோவில், அரசூர் மாரியம்மன் கோவில், ஓலையாம்புத்தூர் அய்யனார் கோவில், செம்பியன் வேளங்குடி அய்யனார் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மேலும் செய்திகள்