< Back
மாநில செய்திகள்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
29 Nov 2022 7:19 PM GMT

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பிரம்மபுரீஸ்வரர் உடனுறை அகிலாண்டேசுவரி கோவிலில் கார்த்திகை 2-வது சோமவார விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

இதேபோல் பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி, பஞ்சநதீஸ்வரர் கோவிலில் சோம வார விழா விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகே கலசம் ஸ்தாபனத்துடன் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், மிருத்யுஞ்செய் ஹோமம், ருத்ரஜபம், பஞ்சாட்சர வேள்வி, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மூலவருக்கு 108 வலம்புரி சங்காபிஷேகமும், அம்பாளுக்கு அனைத்து வகை வாசனை திரவியங்களை கொண்டு சோடஷ அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. விழாவில் குரும்பலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜைகளை கோவில் அர்ச்சகர் சிவசுப்ரமணிய குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர். வெங்கனூரில் உள்ள பிரதோஷ வழிபாட்டிற்கு பெயர்பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவார விழாவை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்