< Back
மாநில செய்திகள்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
1 Oct 2022 8:32 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

புரட்டாசி 2-வது சனிக்கிழமை


திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலை 6 மணியளவில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஏகாந்த சேவை அலங்காரம் நடந்தது. அதைத்தொடர்ந்து உற்சவருக்கு புஷ்ப அலங்காரம், புஷ்பாஞ்சலி நடைபெற்றது. மாலையில் பஜனை பாடல்கள் பாடப்பட்டது.


இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவிலில் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், முத்தங்கி அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலையில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சாமிக்கு நேற்று முன்தினம் மாலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலையில் லட்சுமி நாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.


திண்டுக்கல்-திருச்சி சாலை கே.ஆர்.நகரில் உள்ள ரூபகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணருக்கு பால், தயிர், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது


பழனி


பழனி மேற்கு ரதவீதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடந்தது. கோவிலுக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டனர்.


பட்டத்து விநாயகர் கோவில் அருகே உள்ள பெருமாள் கோவில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில், கரடிக்கூட்டம் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெற்றது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


பட்டிவீரன்பட்டி


மேலும் திண்டுக்கல்லை அடுத்த முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோவில், கோபால சமுத்திரம் பாலஆஞ்சநேயர் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களிலும் புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


பட்டிவீரன்பட்டி நரசிங்க பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு 16 வகையான அபிஷேங்கள் நடைபெற்றன. இதேபோல் சித்தரேவு வரதராஜபெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாளை திரளான பக்தகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அய்யம்பாளையம் லட்சுமிநரசிங்கபெருமாள் கோவிலிலும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன.





மேலும் செய்திகள்