< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
|2 Aug 2022 12:57 AM IST
கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் உள்ள வாலீஸ்வரர் கோவிலில் நேற்று காலை வாலாம்பிகை அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் அம்மனுக்கு வளையல் காப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக பக்தர்கள் வழங்கிய மொத்தம் 1 லட்சத்து 8 வளையல்களை கொண்டு அம்மனுக்கு செல்லப்பா தலைமையில் சிவாச்சாரியார்கள் அலங்காரம் செய்தனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மாலையில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.