< Back
மாநில செய்திகள்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
திருச்சி
மாநில செய்திகள்

கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
1 Aug 2022 3:26 AM IST

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள பெருதிருப் பிராட்டியார் உடனுறை சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதைத்ெதாடர்ந்து தினமும் இரவில் பல்வேறு வாகனங்களில் அம்பாள் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது.

இதையொட்டி காலையில் அம்பாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தேரில் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தாயுமான சுவாமி கோவிலில்...

இதேபோல் திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமான சுவாமி கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் இரவில் அம்பாள் மலைக்கோட்டை உள்வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று மாலை தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ேதரில் எழுந்தருளி மலைக்கோட்டை உள் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (திங்கட்கிழமை) காலை முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தீர்த்தவாரியும், இரவில் பூரம் தொழுதல் நிகழ்ச்சியும், பின்னர் கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

கோரத வீதி உலா

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை உற்சவர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோரதத்தில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.

இன்று(திங்கட்கிழமை) பல்லக்கில் அம்மன் வீதி உலா வருகிறார். பின்னர் அம்மன் சன்னதியில் ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை(செவ்வாவய்க்கிழமை) வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளுகிறார். ஆடிப்பூர தெப்ப உற்சவம் வருகிற 3-ந் தேதி மாலை 4.45 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது.

அம்மனுக்கு வளைகாப்பு

திருச்சி அய்யப்பன் நகர் அஷ்டசித்தி விநாயகர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு துர்க்கை அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சமயபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வளையல்கள் சாத்தப்பட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஐந்து வகையான உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாலையில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது.

உப்பிலியபுரத்தை அடுத்த ஆலத்துடையான்பட்டியில் உள்ள சோழர் காலத்து கோவிலான சவுந்தரவல்லி தாயார் உடனுறை சோமநாதசுவாமி கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்