< Back
ஆன்மிகம்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல்
ஆன்மிகம்

கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
12 Jun 2022 8:21 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் வைகாசி விசாகம், பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

வைகாசி விசாகம்

ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமான் அவதரித்தார். இத்தகைய சிறப்பு மிக்க நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி வள்ளி- தெய்வானை, முருகனுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

அதேபோல் திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தக்கோட்டம் முருகன் கோவில், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடி பாலமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் முருகப்பெருமான் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பட்டிவீரன்பட்டி

பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சமேத முருகன் சன்னதியில் உலக நன்மைக்காக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் கலச தீர்த்தம் மற்றும் மஞ்சள், பன்னீர், சந்தனம் போன்ற அபிஷேக பொருட்களால் வள்ளி-தெய்வானை, சமேத முருகனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன் பின்பு சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அய்யம்பாளையம் மலைமேல் அமைந்துள்ள அருள்முருகன் கோவிலிலும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

திருமலைக்கேணி கோவில்

நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள்பிரகாரத்தில் உள்ள தண்டபாணி, அசோக்நகர் பகவதி அம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதிகளில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.

பிரேதாஷ சிறப்பு பூஜை

திண்டுக்கல்லில் உள்ள அபிராமி அம்மன் கோவிலில் பிரதோஷத்தையொட்டி ஞானாம்பிகை- காளத்தீஸ்வரர் அபிராமி அம்மன்- பத்மகிரீசுவரர் மற்றும் நந்தீசுவரர், கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

மேலும் திண்டுக்கல் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில், மேற்கு ரத வீதி சிவன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. வேடசந்தூர் அருகே உள்ள கே.புதூர் சிவகிரியில் ஸ்படிக லிங்கேஷ்வரர் கோவிலில் சாமிக்கு பால், பழம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ பூஜைகள் நடந்தது. இதையொட்டி மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துெகாண்டனர்.

மேலும் செய்திகள்