அரியலூர்
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
அரியலூரில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதைெயாட்டி சுவாமி மற்றும் நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் குறிஞ்சான் குளக்கரையில் உள்ள காசி விசுவநாதர், ரெயில்வே கேட் அருகில் உள்ள காசி விசுவநாதர் கோவில்களிலும் சுவாமி மற்றும் நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.மேலும் ஆண்டிமடம்- விளந்தை அறம் வளர்த்த நாயகி தர்மசம்வர்த்தினி மேல அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருக்களப்பூர் திருக்கோடிவனத்தீஸ்வரர், விளந்தை அழகு சுப்பிரமணியர், கூவத்தூர் விஸ்வநாதர், அழகாபுரம் அழகாபுரீஸ்வரர், பெரிய கிருஷ்ணாபுரம் படைவெட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள திருநீலகண்டேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.இதேபோல் ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், செங்குந்தபுரம் ஏகாம்பரேஸ்வரர், தண்டலை திருமேனீஸ்வரர், மேலகுடியிருப்பு ஆவீஸ்வரர், புதுச்சாவடி கல்யாணசுந்தரேஸ்வரர், உட்கோட்டை அவதார ரட்சகர், உத்திரகுடி பசுபதீஸ்வரர், தூத்தூர் வராகமுத்தீஸ்வரர், பாலாம்பிகை வல்லம் காசிவிசுவநாதர் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.