< Back
மாநில செய்திகள்
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கரூர்
மாநில செய்திகள்

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
28 May 2022 12:09 AM IST

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நொய்யல்,

புன்னம் பகுதியில் புன்னை வனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

நஞ்சை புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு பால், தயிர், இளநீர்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அருகம்புல்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தோகைமலை அருகே ஆர்.டி.மலை மலை மீது அமைந்துள்ள விராசிலை ஈஸ்வரர் கோவிலில் நந்திபகவானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்