கரூர்
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல் தவுட்டுப்பாளையத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் பாலமலை, வெண்ணைமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.