< Back
மாநில செய்திகள்
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
அரியலூர்
மாநில செய்திகள்

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
29 Oct 2022 12:34 AM IST

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

உடையார்பாளையம்:

உடையார்பாளையம் தெற்கு தட்டார தெருவில் உள்ள பால முருகன் கோவிலில் கந்த சஷ்டி மகா லட்சார்ச்சனை விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காப்பு கட்டி அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, புண்ணியாக வாஜனம், வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நேற்று சப்பர மஞ்சம் வாகனத்தில் மூலவர் விருத்தன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதேபோல் அரியலூரில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் 4-ம் நாளான நேற்று ரிஷப வாகனத்தில் முருகர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுமாமி வீதி உலா நடந்தது.

மேலும் செய்திகள்