< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கரூர்
மாநில செய்திகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
24 Dec 2022 12:36 AM IST

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வேலாயுதம்பாளையத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் புன்னம் சத்திரம் அருகே உப்புபாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மன் கோவிலில் நேற்று மார்கழி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மேலும் செய்திகள்