< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
|8 Nov 2022 12:41 AM IST
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
தளவாப்பாளத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல நாணப்பரப்பு, வேலாயுதம்பாளையம், கடம்பங்குறிச்சி, தோட்டக் குறிச்சி மண்மங்கலம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.