< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கரூர்
மாநில செய்திகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
26 Sept 2022 12:17 AM IST

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நொய்யல் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. வேலாயுதம்பாளையத்தில் உள்ள மகாமாரி அம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பச்சை நிற பட்டு உடுத்தி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.

தோகைமலை அருகே நாக நோட்டக்காரன்பட்டியில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் அம்மன் நேற்று அதிகாலை பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. இதேபோல் கரூர் மாவட்டத்தில் அனைத்து அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்