< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
திருச்சி
மாநில செய்திகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
30 July 2022 1:19 AM IST

ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மணப்பாறை மான்பூண்டி நல்லாண்டவர் தேரில் எழுந்தருளி வலம் வந்தார்.

முசிறி, ஜூலை.30-

ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மணப்பாறை மான்பூண்டி நல்லாண்டவர் தேரில் எழுந்தருளி வலம் வந்தார்.

சிறப்பு வழிபாடு

ஆடி 2-ம் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். முசிறி கள்ளர் தெரு மகா மாரியம்மனுக்கு பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது.

இதேபோல் தா.பேட்டையில் பிள்ளாதுரை பெரியமாரியம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, தேவானூர் ராஜகாளியம்மன், கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழிபாடுகள் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருளினர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

துறையூர், மணப்பாறை

துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் வேப்பிலை அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோன்று பாலக்கரையில் உள்ள மகா மாரியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் பகுதியில் மான்பூண்டி நல்லாண்டவர் கோவிலில்ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நல்லாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவில் மான்பூண்டி நல்லாண்டவர் தேரில் வைக்கப்பட்டு தேர் கோவிலில் உட்சுற்று உலா வந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இதே போல் மணப்பாறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வேப்பிலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மேலும் செய்திகள்